தமிழ்நாடு

நான் நீதிபதியாக இருந்திருந்தால்: விஜய் வரி வழக்கு குறித்து முன்னாள் நீதிபதி சந்துரு பேட்டி

Published

on

நான் நீதிபதியாக இருந்திருந்தால் இந்த வழக்கின் தீர்ப்பு வேறு மாதிரி இருந்திருக்கும் என முன்னாள் நீதிபதி சந்துரு அவர்கள் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

பாண்டிச்சேரியில் குறைந்த வரி செலுத்தி தமிழகத்திற்கு வாகனங்களை கொண்டு வருவதால் தான் நுழைவு வரி என்ற வரி விதிக்கப்பட்டது. ஆனால் விஜய் பாண்டிச்சேரியில் கார் வாங்கவில்லை. இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்து சுங்க வரி கட்டி முறையாக கொண்டு வந்துள்ளார். கப்பல் வழியாக வரும் வண்டிகளுக்கு நுழைவு வரி கிடையாது. ஆனால் நுழைவு வரி சட்டம் குறித்து சட்டம் புரிந்தவர்களுக்கே இன்னும் குழப்பமாக இருக்கிறது.

நான் நீதிபதியாக இந்த வழக்கில் இருந்திருந்தால் இந்த மாதிரி தீர்ப்பை கண்டிப்பாக கொடுத்திருக்க மாட்டேன். இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் வரியிலிருந்து விலக்கு கேட்பது உரிமை. இந்தியாவில் உள்ள பல பணக்காரர்கள் வரி விலக்கு கேட்டு வழக்கு தொடுத்தார்கள். வரிவிலக்கு கிடைத்தால் சந்தோஷப்படுவார்கள். இல்லை என்றால் வரியை கட்டப்பட்ட போகிறார்கள்.

விஜய் வழக்கில் நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தது கூட தவறில்லை. ஆனால் ரியல் ஹீரோ, ரீல் ஹீரோ என்பதெல்லாம் தேவையில்லாத விஷயம். விஜய் தனது மேனேஜர் சொன்னதையும், அவருக்கு அறிவுரை சொன்னதையும் கேட்டு அவர் வழக்கு தொடுத்திருக்கிறார். அதற்கு விஜய்யை ஏன் குறை சொல்ல வேண்டும். அவருக்கு ஆலோசனை சொன்னவர்களையும் வழக்கு தொடுக்க அட்வைஸ் கொடுத்த வழக்கறிஞர்களையும் தான் குற்றம் சாட்ட வேண்டும்.

அவர் வரிஏய்ப்பு செய்கிறார் என்று எப்படி சொல்ல முடியும்? வரிவிலக்கு இல்லை என்று சொன்னால் வரியை கட்டப் போகிறார். அதற்கு அபராதம் கட்ட போகிறார். இதற்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? என்று தெரியவில்லை.

விஜய் ஒரு டிகிரி படித்தவர் என்றாலும் அவருக்கு எல்லா சட்டமும் தெரிய வேண்டும் என்று அவசியமில்லை. இந்த வழக்கில் விஜய்யை தேவையில்லாமல் விமர்சனம் செய்து இருப்பதாகவே நான் கருதுகிறேன். விஜய் தரப்பில் இரண்டு நீதிபதிகளிடம் அப்பீல் போட்டால் இந்த கருத்தை எல்லாம் ரத்து செய்து விடுவார்கள். ஒருவருடைய கேரக்டரை டேமேஜ் செய்தால் தாராளமாக அப்பீல் செய்யலாம் என்று நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version