தமிழ்நாடு

கொரோனா பரவல் எதிரொலி: திருப்பூர் மாவட்டத்துக்கு புதிய கட்டுப்பாடுகள்!

Published

on

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதன் காரணமாக புதியக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் கொரோனா பாதிப்பு 1,949 என்ற கணக்கில் உள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் திருப்பூர், நாகை மாவட்டங்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் பால் மற்றும் மருந்தகம் தவிர மற்ற கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல், டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். அதேபோல், உணவகங்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதுவும் 50 சதவிகித இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த உத்தரவு.

சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் ஆகியன செயல்பட தடை உள்ளது. உணவகங்களில் பார்சல் சேவை இரவு 9 மணி வரை மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version