தமிழ்நாடு

நாளை முதல் பொது போக்குவரத்திற்கு என்னென்ன கட்டுப்பாடுகள்? தமிழக அரசின் அறிவிப்பு!

Published

on

நாளை முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொது போக்குவரத்திற்கு என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதை தற்போது பார்ப்போம்.

மாநிலங்களுக்கு இடையிலான பொது மற்றும் தனியார் பேருந்து சேவைகள் தொடரும் என்றும் ஆனால் அதே நேரத்தில் பயணத்தின்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முக கவசம் அணிதல், உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசலை தவிர்த்தல், ஆகியவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் அவ்வாறு செலுத்தாமல் இருந்தால் பேருந்துகளை இயக்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பணிகளுக்கான வாகனங்களான பால் வினியோகம், தினசரி பத்திரிகை, மருத்துவமனை ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத் துறை சார்ந்த வாகனங்களுக்கு அனுமதி உண்டு.

மேலும் சரக்கு போக்குவரத்து வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும். மேலும் மெட்ரோ ரயில்கள் 50 சதவீத பயணிகளுடன் மட்டும் அனுமதிக்கப்படும். வாகனங்களுக்கு தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். இவ்வாறு பொதுபோக்குவரத்து குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version