தமிழ்நாடு

சட்டசபையில் இன்று இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம்?

Published

on

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்திய குடியுரிமை சட்டம் மத்திய அரசு அமல்படுத்திய நிலையில் இந்த சட்டத்திற்கு தமிழகத்தை சேர்ந்த திமுக உள்பட பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன என்பதும் குறிப்பாக திமுக சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போதே இந்த சட்டத்தை எதிர்த்துப் போராடிய நிலையில் தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் நிலையில் இந்த சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகிஉள்ளது.

இந்திய குடியுரிமை சட்டம் உரிய ஆலோசனை மேற்கொள்ளப்படாமல் நிறைவேற்றி இருப்பதாகவும், அந்த சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்ய வேண்டும் அல்லது அந்த சட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்த கூடிய தீர்மானம் ஒன்று இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று சட்டப்பேரவையில் இந்திய குடியரசு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வர உள்ளார் என்றும், அந்த தீர்மானத்தை அதிமுக, பாஜக தவிர அனைத்து கட்சிகளும் ஆதரிக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம் 28ஆம் தேதி மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version