தமிழ்நாடு

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த வெங்கடேசன் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம்!

Published

on

புதுவையில் கடந்த சில நாட்களாக அரசியல் குழப்பம் இருந்து வந்த நிலையில் திடீரென ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதனால் புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு ஆட்டம் கண்டது என்பதும், இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால் முதல்வர் உள்பட அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான திமுகவின் எம்எல்ஏ வெங்கடேசன் என்பவரும் ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜினாமா செய்த பின் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த வெங்கடேசன் தான் முக ஸ்டாலின் இடம் சொல்லிவிட்டு தான் ராஜினாமா செய்ததாக கூறியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்படியானால் வெங்கடேசன் ராஜினாமாவுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் ஒப்புதல் அளித்ததாகவும் கூறப்பட்டதால் காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் சற்று முன்னர் வெளியான தகவலின்படி புதுச்சேரியில் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த வெங்கடேசன் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த உத்தரவை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் திமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version