தமிழ்நாடு

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் : ரிசர்வ் வங்கி வெளியிட்ட விளக்க அறிக்கை!

Published

on

தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காமல் இருந்த ரிசர்வ் வங்கி அதிகாரிகளால் பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் இன்று காலை ரிசர்வ் வங்கி தனது வருத்தத்தை தமிழக அரசிடம் தெரிவித்து என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ரிசர்வ் வங்கி இது குறித்து விளக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஜனவரி 26, 2022 இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற 73வது குடியரசு தின கொண்டாட்டங்களின் போது நிகழ்ந்த நிகழ்வுகளின் தொடர்பில் இது வெளியிடப்படுகிறது.

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ் கலாச்சாரம் மற்றும் மரியாதை செலுத்துவதில் அடையாளமாக தமிழ் தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. எனினும் பின்னர் அதனை தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில் பாடல் குறித்து சற்றும் எதிர்பாராத மற்றும் விரும்பத்தக்காத சில தேவையற்ற கூற்றுகள் எழுப்பப்பட்டன.

தமிழ் தாய் வாழ்த்து தமிழ்நாட்டின் மாநில பாடல் என்பதை நாங்கள் உணர்கிறோம். ஒரு ஒழுங்குமுறை நடத்தும் அமைப்பு என்ற முறையில் நாங்கள் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பின்பற்றப்படும் பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளை மதிக்கிறோம் என்பதை மீண்டும் தெரிவிக்க விரும்புகிறோம்.

இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல அலுவலகத்தின் பிரதிநிதிகள் மண்டல இயக்குனர் திரு எஸ் எம் என் சுவாமி அவர்களின் தலைமையில் மதிப்பிற்குரிய தமிழக நிதியமைச்சர் டாக்டர் தியாகராஜன் அவர்களை சந்தித்து இது தொடர்பான எங்கள் நிலைப்பாட்டை உறுதி செய்தனர். இவ்வாறு ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

Trending

Exit mobile version