இந்தியா

புதிய 500 ரூபாய் நோட்டும் செல்லாதா? ரிசர்வ் வங்கி அளித்த விளக்கம்!

Published

on

தற்போது அதிகபட்ச மதிப்புடையதாக 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் இருந்தாலும் 2000 ரூபாய் பெரும்பாலும் புழக்கத்தில் இல்லை என்பதால் 500 ரூபாய் மட்டுமே பெரும்பாலும் புழக்கத்தில் உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அதிகபட்ச மதிப்பு 500 ரூபாய் நோட்டில் எழுதினால் அல்லது கிறுக்கினால் அந்த நோட்டு செல்லாது என்றும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

500 ரூபாய் உள்பட எந்த ஒரு ரூபாய் நோட்டிலும் பெயரோ அல்லது வேறு குறிப்புகளை எழுத கூடாது என்றும் ஆனால் அதே நேரத்தில் அவ்வாறு தவறுதலாக எழுதினால் அது செல்லாது என்று வைத்துக் கொள்ள முடியாது என்றும் இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

ரூபாய் நோட்டு என்பது இந்திய ரிசர்வ் வங்கி கொடுக்கும் ஒரு மதிப்புடைய பணம் என்பதால் அந்த நோட்டுகளில் எழுதுவது, கிறுக்குவது ஆகியவை செய்யக்கூடாது என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் ரூபாய் நோட்டுகளில் எழுதுவதால் அந்த நோட்டு செல்லாது என்று ஆகி விடாது என்றும் ரூபாய் நோட்டுகளில் எழுத வேண்டாம் என்று கூறுவது எதற்காக என்றால் அது சேதம் அடையும் தன்மை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதனால்தான் அதில் எதையும் எழுத வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளதாக ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. இதனை அடுத்து சமூக ஊடகங்களில் ரூபாய் நோட்டில் எழுதினால் செல்லாது என்ற தகவல் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி மேலும் கூறியபோது ’ரூபாய் நோட்டில் எழுதுவது மட்டுமின்றி பின் குத்துவது மற்றும் மடித்து விளையாடுவது ஆகியவை கூடாது என்றும் ரூபாய் நோட்டுகள் சேதமாகி இருப்பதாக நீங்கள் நினைத்தால் உடனடியாக நீங்கள் எந்த வங்கியில் உள்ள கிளைகளிலும் கொடுத்து மாற்றி மாற்றிக் கொள்ளலாம் என்றும் அல்லது உங்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்து செய்து கொள்ளலாம் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அதேபோல் மண்ணில் புதைந்திருப்பது உள்பட ரூபாய் நோட்டுகள் எந்த வடிவத்தில் சேதம் அடைந்திருந்தால் எந்த வங்கியில் உள்ள கவுண்டர்களும் இலவசமாக மாற்றிக்கொள்ளலாம் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனை அடுத்து ரூபாய் நோட்டுகள் வடிவத்தில் இருந்தாலும் செல்லாது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அது சிதைந்து இருந்தாலும் கூட அந்த பணத்தை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி உறுதி செய்துள்ளது.

இதனை அடுத்து ரிசர்வ் வங்கி அச்சடித்த பணம் செல்லாது என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version