இந்தியா

மாஸ்டர் டெபிட் – கிரெடிட் கார்டுகளுக்கு திடீர் கட்டுப்பாடு: ரிசர்வ் வங்கி உத்தரவு

Published

on

மாஸ்டர் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு திடீர் கட்டுப்பாடு விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜூலை 22-ஆம் தேதி முதல் மாஸ்டர் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. மாஸ்டர் கார்டு நிர்வாகம் விதிகளை மீறி செயல்பட்டதால் மாஸ்டர் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி வைத்துள்ளதாக தெரிகிறது.

பெரும்பாலான வங்கி வாடிக்கையாளர்களுக்கு வங்கி நிர்வாகம் மாஸ்டர் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திடீரென மாஸ்டர் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு நிபந்தனை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் ஏற்கனவே மாஸ்டர் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இந்த விதி பொருந்தாது என்று அறிவித்துள்ளதால் மாஸ்டர் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Trending

Exit mobile version