இந்தியா

வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: ரிசர்வ் வங்கி!

Published

on

இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை கூட்டம் நேற்று முன்தினம் நடந்த நிலையில் இதில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் உள்பட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த இந்த கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாகவும் அதன் 35 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.35% ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் தற்போது 5.90 என்று இருக்கும் நிலையில் அது 6.25 ஆக மாற்றப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் மட்டும் ரெப்போ வட்டி வீதம் நான்கு முறை உயர்ந்து உள்ள நிலையில் தற்போது ஐந்தாவது முறையாக உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரெப்போ வட்டி விகித உயர்வு காரணமாக கடன்களுக்கான வட்டி மேலும் உயர வாய்ப்பு உள்ளது. குறிப்பாக வீட்டு லோன், தனி நபர் லோன், வாகன லோன் எடுத்தவர்கள் அதிக அளவில் தவணைத்தொகை கட்டவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரெப்போ வட்டிவீதம் உயர்த்துவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ரெப்போ வட்டி விகித உயர்வு என்பது லோன் எடுத்தவர்களுக்கு பெரும் சுமையாக இருந்தாலும் வங்கிகளில் டெபாசிட் செய்தவர்களுக்கு வரப்பிரசாதம் என்பது குறிப்பிடதக்கது. ஏற்கனவே நான்கு முறை வட்டி விகித உயர்வு காரணமாக பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் உயர்ந்துள்ள நிலையில் தற்போது மேலும் உயர வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version