தமிழ்நாடு

‘இனிமே இட ஒதுக்கீடு முறை இருக்க கூடாது..!’- ம.நீ.ம நட்சத்திர வேட்பாளர் பத்மப்ரியாவின் ‘பகீர்’ பேட்டி

Published

on

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறார் பிரபல யூடியூபர் பத்மப்ரியா. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடான இ.ஐ.ஏ-வை எதிர்த்து யூடியூபில் வீடியோ போட்டதால் புகழ் வெளிச்சம் கண்டவர் பத்மப்ரியா. இந்நிலையில் அவர் இட ஒதுக்கீடு முறை குறித்து கொடுத்துள்ள விளக்கம் ஒன்று அதிர வைக்கும் வகையில் உள்ளது. 

தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பத்மப்ரியா அளித்தப் பேட்டியில் இட ஒதுக்கீடு குறித்துப் பேசுகையில், ‘சில சாதிகளுக்கு சமமான உரிமைகள் கொடுக்கப்படாத காரணத்தினால் இட ஒதுக்கீடு முறை அமல் செய்யப்பட்டது. ஆனால் இப்போது சமூகத்தில் அனைத்துத் தரப்பினரும் நல்ல கல்வி பெற்று சம உரிமை பெற்று வருகிறார்கள்.

எனவே இந்தக் காலத்திலும் இட ஒதுக்கீடு முறை தேவையா? யாருக்கு திறமை இருக்கிறதோ அவர்கள் படித்து முன்னேற வேண்டும். உயர் சாதியைச் சேர்ந்த பலர் திறமை இருந்தும் வேலையில்லாமல் தவித்து வருகிறார்கள். எந்த திறமையும் இல்லாமல் இட ஒதுக்கீடு மூலம் நல்ல பதவியில் இருப்பவர்களும் உள்ளனர். 

எனவே, இப்போது இருக்கும் மக்களிடத்தில் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தேவையா என்று கேட்டால், பெரும்பான்மையானவர்கள் வேண்டாம் என்று தான் சொல்வார்கள். இட ஒதுக்கீடு என்பது பழைய நடைமுறையாகும். அதை ஏன் இன்னும் மாற்றாமல் வைத்துள்ளோம்’ என்கிற அதிர்ச்சிக் கருத்தைத் தெரிவித்துள்ளார். 

தேசிய அளவிலும் மாநில அளவிலும் சாதிய ஒடுக்குமுறைகள் தொடர்ந்து வரும் நிலையில், சாதிய அடிப்படையிலான இட ஒதுக்கீடு தேவையில்லை என்று பத்மப்ரியா தெரிவித்திருப்பது விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. 

Trending

Exit mobile version