தமிழ்நாடு

தனியார் துறை வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு

Published

on

தனியார் துறை வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது அரசுத்துறை மட்டுமே இட ஒதுக்கீடு முறை அமலில் உள்ள நிலையில் தனியார் துறையில் எந்த விதமான இட ஒதுக்கீடும் இல்லாமல் திறமையின் அடிப்படையில் மட்டுமே வேலை கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தனியார் துறையிலும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசின் சட்டத்தை திருத்த வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் இட ஒதுக்கீடு அளவை நிர்ணயிக்கும் உரிமையை அந்தந்த மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த விளக்க குறிப்பில் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

தனியார் துறையிலும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியல் சட்டத் திருத்தம் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு தனியார் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

seithichurul

Trending

Exit mobile version