தமிழ்நாடு

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு: சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பு

Published

on

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு எதிர்ப்பு பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தீர்ப்பு சற்று முன் வெளியாகியுள்ளது.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா முந்தைய அதிமுக அரசின் போது இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்தும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன .

இந்த வழக்குகள் அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் பொதுத்தேர்வில் உள்ள தகுதியான மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் சற்று முன்னர் ’மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை இந்த இட ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version