தமிழ்நாடு

சென்னையில் குடியரசு தினவிழா: மத்திய அரசு மறுத்த பாரதி, வ.உ.சி. வேலு நாச்சியார் அணிவகுப்பு

Published

on

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த பாரதியார், வ.உ.சி. வேலுநாச்சியார் ஆகியோரின் உருவங்கள் கொண்ட அணிவகுப்பிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் மத்திய அரசுக்கு தங்களது கண்டனங்களை பதிவு செய்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னையில் இன்று குடியரசு தின அணிவகுப்பு விழா நடைபெற்று வருகிறது. ஆளுநரின் ரவி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து குடியரசு அணிவகுப்பு விழாவை தொடக்கி வைத்தார்.

 இந்த அணிவகுப்பில் மத்திய அரசால் மறுக்கப்பட்ட பாரதியார், வ உ சிதம்பரனார், வேலுநாச்சியார் ஆகியோரின் உருவங்கள் கொண்ட ஊர்திகள் இடம் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் தந்தை பெரியார் உருவம் கொண்ட விடுதலைப் போரில் தமிழகம் என்ற அணிவகுப்பும் அதேபோல் விடுதலை போராட்டத்தில் பாடுபட்ட காமராஜர் பொன் முத்துராமலிங்கம் ராஜாஜி உள்பட பல தலைவர்களின் சிலைகள் அடங்கக்கூடிய அணிவகுப்பும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வீரமங்கை வேலுநாச்சியார், வ.உ. சிதம்பரம், தந்தை பெரியார், இரட்டைமலை சீனிவாசன், முத்துராமலிங்கத்தேவர் ஆகிய உருவங்களுடன் நடைபெற்ற இந்த குடியரசு தின விழா அணிவகுப்பை நேரில் பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை என்றாலும் நேர அலைகளில் பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருவதை அடுத்து அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல முக்கிய பிரபலங்கள் இந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version