இந்தியா

வங்கி கடன் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Published

on

வங்கி கடன் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளதை அடுத்து பங்குச்சந்தையில் ஏற்றம் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் குறித்த அறிவிப்பை அவ்வப்போது ரிசர்வ் வங்கி வெளியிடும் என்பதும் அதன் தாக்கம் பங்குசந்தையில் இருக்கும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன்னர் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை என்று அறிவித்தார்.

இதனை அடுத்து இதற்கு முன்னர் இருந்தது போலவே வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 4 சதவீதமாக நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வீடு வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் அதே நிலையில் தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதை அடுத்து இன்று பங்கு சந்தை ஏற்றத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

seithichurul

Trending

Exit mobile version