தமிழ்நாடு

2 மாதங்களுக்கு மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

Published

on

இந்திய ரிசர்வ் வங்கி அடுத்த இரண்டு மாதங்களுக்கு கடன் கொள்கையில் மாற்றம் இல்லை என அறிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி தனது கடன் கொள்கையில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு மாற்றம் இல்லை என்று கூறியுள்ளதை அடுத்து வீடு, வாகனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் ஏற்கனவே இருந்த அளவிலேயே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ எனப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி தற்போது 4% என வழங்கப்பட்டு வருகிறது. இதே நிலை அடுத்த இரண்டு மாதங்களுக்கும் தொடரும் என இந்திய ரிசர்வ் வங்கியின் இயக்குனர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் ரிவர்ஸ் ரெப்போ என்று கூறப்படும் ரிசர்வ் வங்கியில் வங்கிகள் கொடுத்து வைக்கும் டெபாசிட் பணத்திற்கான வட்டி 3.35 சதவீதம் என நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 6 முறை வட்டி விகிதங்களில் எந்தவித மாற்றமும் இல்லை என இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளதை அடுத்து தற்போது ஏழாவது முறையாக வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version