இந்தியா

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Published

on

வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக ரெப்போ வட்டி விகிதம் 4 சதவிகிதமாக ஏற்ற இறக்கமின்றி இருந்து வந்தது.

RBI

இந்த நிலையில், ரெப்போ வட்டி விகிதம் தற்போது 0.40 சதவிகிதம் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 4.40 சதவிகிதம் என உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் வீடு, தனிநபர், வாகன கடன்களுக்கான வட்டி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் – ரஷியா போர் விளைவாக ஏற்பட்ட பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்த ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version