இந்தியா

வட்டி விகிதங்களில் மாற்றமா? ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு!

Published

on

வங்கிகளின் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் சற்றுமுன் அறிவித்துள்ளார் .

ஏற்கனவே 10 முறை வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்ற நிலையில் தற்போது 11வது முறையாக மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்ததை அடுத்து வட்டி விகிதம் 4 சதவீதமாக நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெப்கோ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்பதால் வீடு, வாகன கடன் விகிதத்தில் மாற்றம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக பொருளாதார நிலை படுமோசமாக இருந்ததை அடுத்து கடந்த கடந்த இரண்டு ஆண்டுகளாக ரெப்கோ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் MSF விகிதம் மற்றும் வங்கி விகிதம் மாறாமல் 4.25 சதவீதமாக தொடரும் என்றும், ரிவர்ஸ் ரெப்போ விகிதமும் மாறாமல் 3.35 சதவீதமாக இருக்கும் என்றும் இந்த விகிதம் நடப்பு 2022-23 நிதியாண்டிற்கான முதல் இருமாத பாலிசி என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version