சினிமா செய்திகள்

நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

Published

on

தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி தமிழ் திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ரேணிகுண்டா உள்பட பல தமிழ் திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்தவர் தீப்பெட்டி கணேசன். இவருடைய உயரம் மற்றும் ஹேர்ஸ்டைல் இவருக்கு பிளஸ் ஆக இருந்தது என்பதும் இவர் பல படங்களில் காமெடி மட்டும் வில்லத்தனமான கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக தீப்பெட்டி கணேசன் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை காலமானதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது குறித்து இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

எனது படங்களில் நடித்து வந்த சிறந்த நடிகன் தம்பி கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமான செய்தி கேட்டு உள்ளம் கலங்கினேன். அன்புநிறை இதய அஞ்சலி கணேசா.

Trending

Exit mobile version