தமிழ்நாடு

புதுவையில் பாஜகவுக்கு துணை முதல்வர் பதவி: மேலும் 2 அமைச்சர்கள் ஒதுக்கீடு

Published

on

தமிழகத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் முதல்வர் பதவியை ஏற்றது போலவே அண்டை மாநிலமான புதுவையில் ரங்கசாமி தலைமையிலான கூட்டணி பதவியேற்றுள்ளது. முதல்வராக என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

புதுவையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி 16 தொகுதிகளில் வெற்றி பெற்றது. என்ஆர் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் என்ஆர் காங்கிரஸ் சட்டமன்ற தலைவராக ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டர். இதனை அடுத்து அவர் முதல்வராக ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்றார்.

இந்த நிலையில் புதுச்சேரி பாஜக சட்டமன்ற கட்சி தலைவராக நமசிவாயம் அவர்கள் தேர்வு பெற்றுள்ளார். அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு அமைச்சர்கள் பதவி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. எனவே புதுவையில் முதன்முதலாக அமைச்சரவையில் பாஜக இணைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version