இந்தியா

குறிப்பிட்ட பேட்ஜ் கொண்ட மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்: ரெம்டெசிவிர் அறிவிப்பு

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மோசமான சாதனையை உலகில் ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது. இதனால் ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்பதும், ஒரு சிலர் இந்த மருந்தை கள்ள மார்க்கெட்டில் நாற்பதாயிரம் ஐம்பதாயிரம் என விற்பனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த நிலையில் ரெம்டெசிவிர் மருந்து தயாரிக்கும் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட பேட்ஜ் கொண்ட ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என அறிவித்துள்ளது. இது குறித்து ரெம்டெசிவிர் மருந்து நிறுவனம் விடுத்த வேண்டுகோளில் தங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட HCL21013 என்ற பேட்ஜ் கொண்ட ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவித்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக குறிப்பிட்ட பேட்ஜ் கொண்ட ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று ரெம்டெசிவிர் நிறுவனம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version