தமிழ்நாடு

புதிய அட்டைதாரர்களுக்கு நிவாரண பொருட்கள் எப்போது? தமிழக அரசு அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் திமுக ஆட்சி தோன்றியவுடன் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 ஆயிரம் ரொக்கம் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அளிக்கப்படும் என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார்.

GPF interest rate hiked to 8% for Oct-Dec

இதனை அடுத்து முதல்கட்டமாக ஏற்கனவே ரூபாய் 2000 வழங்கப்பட்ட நிலையில் இரண்டாம் கட்டமாக சமீபத்தில் ரூபாய் 2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நிவாரணப் பொருள்கள் பெறாதவர்களுக்கு தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் இதுவரை நிவாரண பொருட்களை பெறாதவர்கள் ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி புதிதாக அரிசி ரேஷன் அட்டை பெற்றவர்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என்றும் அவர்களும் ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் தங்களுடைய ரேஷன் கடைகளுக்கு சென்று நிவாரண பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் இரண்டாம் தவணை ரூபாய் 2000 மற்றும் நிவாரண பொருட்கள் வரும் 31ம் தேதிக்குள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version