இந்தியா

நாட்டின் 17,000 ரிலையன்ஸ் ரீடெய்ல் ஸ்டோர்களில் டிஜிட்டல் ரூபாய்.. அதிரடி அறிவிப்பு

Published

on

மத்திய அரசு சமீபத்தில் டிஜிட்டல் ரூபாயை அறிமுகம் செய்த நிலையில் இந்தியாவில் உள்ள 17,000 ரிலையன்ஸ் ரீடெய்ல் ஸ்டோர்களில் டிஜிட்டல் ரூபாய் ஏற்றுக் கொள்ளப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் இந்தியாவில் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்தார். இந்திய ரிசர்வ் வங்கி நாடு முழுவதும் இது குறித்து சோதனை நடவடிக்கை எடுத்த நிலையில் டிஜிட்டல் நாணயங்களை டிசம்பர் ஒன்றாம் தேதி அறிமுகம் செய்தது.

பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ் வங்கி, கோடக் மகேந்திரா வங்கி உட்பட 8 வங்கிகள் மூலம் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் நாட்டில் உள்ள 17,000 ரீடைல் ரிலையன்ஸ் ரீடெய்ல் ஸ்டோர்களில் டிஜிட்டல் ரூபாய் ஏற்றுக் கொள்ளப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் ரூபாயை ஏற்றுக்கொள்ளும்படி ஐசிஐசி வங்கி மற்றும் கோடக் வங்கியுடன் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது என்றும் பில்லிங் செய்த பிறகு நுகர்வோர் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்த விரும்பினால் அவர்களுக்கு டிஜிட்டல் ரூபாயை ஏற்றுக் கொள்ளப்படும் க்யூஆர் கோடு வழங்கப்படும் என்றும் அதன் மூலம் அவர்கள் பணம் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரிலையன்ஸ் ரீடெய்ல் நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன் அவர்கள் கூறுகையில், ‘யூபிஐ அமைப்பை விட டிஜிட்டல் ரூபாய் சிறப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்றும் பரிவர்த்தனைகளும் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்றும் இந்தியாவில் உள்ள அனைத்து 17,000 ரிலையன்ஸ் பாதுகாப்பாக ஸ்டோர்களிலும் டிஜிட்டல் ரூபாய் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் கட்டமாக டெல்லி, மும்பை, பெங்களூர் மற்றும் புவனேஸ்வர் ஆகிய நான்கு நகரங்களுக்கு மட்டும் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக ஒன்பது நகரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது இனி மேலும் வருங்காலத்தில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து நகரங்களுக்கும் டிஜிட்டல் ரூபாய் ஏற்று கொள்ளும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

seithichurul

Trending

Exit mobile version