வணிகம்

வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்காக புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்த ஜியோ!

Published

on

கொரோனா வைரஸ் எதிரொலியாக, ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரியுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் போது அதிகளவில் இணைய தரவுகள் தேவைப்படும். அதை கருத்தில் கொண்டு, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ‘Work From Home Pack’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டத்தின் படி 251 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 51 நாட்களுக்கு, தினமும் 2 ஜிபி இணையதள தர்வு கிடைக்கும். அளிக்கப்பட்டுள்ள தரவு கட்டுப்பாட்டைக் கடந்தால், இணையதள வேகம் 64 kbps ஆக குறையும். இலவச குரல் அழைப்புகளும் செய்ய முடியும்.

கூடுதல் தரவு தேவைப்பட்டால், 11 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 800 எம்பி தரவும், 21 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 2ஜிபி தரவும், 51 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 6ஜிபி தரவும், 101 ரூபாய்க்கு ரீசாஜ் செய்தால் 12 ஜிபி தரவும் கிடைக்கும். இந்த ரீசார்ஜ் செய்யும் போது ஜியோ அல்லாத பிற நெட்வொர்க் அழைப்புகளை மேற்கொள்வதற்கான 75, 200, 500 மற்றும் 1000 நிமிடங்கள் கிடைக்கும்.

Trending

Exit mobile version