வணிகம்

ஜியோ வாடிக்கையாளர்களுக்குப் புத்தாண்டு பரிசு அறிவிப்பு!

Published

on

குறைந்த காலத்தில் இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமாக உருவெடுத்துள்ள ரிலையன்ஸ் ஜியோ, தங்களது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புத்தாண்டு பரிசுகளை அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்டதிலிருந்து பல இலவசங்களை அளித்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்தது.

இலவசத்தைக் கண்டு ஜியோ வாடிக்கையாளர்களாக மாறியவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக, சென்ற ஆண்டு முதல் பிற நெட்வொர்க்குகளுக்கு அழைத்தால் கட்டணம் விதிக்கப்பட்டது. ஆனால் போட்டி நிறுவனமான ஏர்டெல் இலவசமாகவே பிற நெட்வொர்க்குகள் அழைப்பை அளித்து வந்தது.

இதனால் சென்ற மூன்று மாதங்களாக ஏர்டெல்லில் புதிதாக இணையும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. ஜியோ பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஒரு நெட்வொர்க்கில் இருந்து பிற நெட்வொர்க்குக்கு அழைக்கும் போது, சம்மந்தப்பட்ட அடுத்த நிறுவனத்திடமும் கட்டணம் பகிர வேண்டி உள்ளது. ஜியோ பல இலவசங்களை வழங்கியதால் பிற நெட்வொர்க்குகளை அழைப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

எனவே அந்த கட்டணத்தை டிராய் குறைக்கும் வரை பிற நெட்வொர்க்குகளை அழைக்கும் போது, ஜியோ வாடிக்கையாளர்கள் நிமிடத்திற்கு 10 பைசா கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். தற்போது அந்த கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதால், புத்தாண்டு முதல் ஜியோ வாடிக்கையாளர்கள் பிற நெட்வொர்க்குகளுக்கு இலவசமாக அழைக்கலாம் என்று அறிவித்துள்ளது.

இவை மட்டுமல்லாமல் புதிய ரீசார்ஜ் போக்குகளையும் ஜியோ அறிமுகம் செய்துள்ளது.

ரூ,129-க்கு ரீசார்ஜ் செய்தால், 28 நாட்களுக்கு இந்தியா முழுவதும் அனைத்து கால்களும் இலவசம். மேலும் 28 நாட்களுக்கு 2 ஜிபி தரவும் வழங்கப்பட்டுள்ளது.

149 ரூபாய்க்கு ரீசாஜ் செய்தால் 24 நாட்களுக்குத் தினம் 1 ஜிபி தரவு மற்றும் இந்தியா முழுவதும் அனைத்து அழைப்புகளும் இலவசம். 199 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்குத் தினம் 1.5 ஜிபி தரவு மற்றும் இந்தியா முழுவதும் அனைத்து அழைப்புகளும் இலவசம்.

ரூ.555-க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்களுக்குத் தினமும் 1.5 ஜிபி தரவு மற்றும் இந்தியா முழுவதும் அனைத்து அழைப்புகளும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version