வணிகம்

ஜியோ மார்ட் – வாட்ஸ்ஆப் சோதனை சேவை தொடக்கம்!

Published

on

ரிலையன்ஸ் ஜியோவின் இ-காமர்ஸ் பிரிவான ஜியோ மார்ட் வாட்ஸ்ஆப் உடன் இணைந்து விற்பானை செய்யும் சோதனை ஓட்டத்தைத் தொடங்கியுள்ளது.

பேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவில் 44 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ததை அடுத்து வாட்ஸ்ஆப்-ல் இந்த புதிய சேவை தொடங்கியுள்ளது.

இந்த சோதனை ஓட்டமானது நவி மும்பை, தானே மற்றும் கல்யாண் ஆகிய பகுதிகளில் கிடைக்கும்.

ஜியோ மார்ட் செயலியில் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த உடன், அதற்கான அறிவிப்புகள் வாட்ஸ்ஆப் மூலம் கிடைக்கும். ஜியோ மார்ட் சேவை மூலமாக நாடு முழுவதிலும் மொத்த கொள்முதல் விலையில் பொருட்களை வாங்கவும், விற்கவும் முடியும்.

Trending

Exit mobile version