வணிகம்

ஏர்டெல், வோடஃபோன் ஐடியாவுடன் கூட்டுச் சேர்ந்த ஏர்டெல்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

Published

on

இந்தியாவில் உள்ள கார்பேர்ட் நிறுவனங்கள் அதிக நட்டம் அடைந்துள்ளதாக வோடாஃபோன் ஐடியா நிறுவனமும், ஏர்டெல் நிறுவனங்களும் சென்ற வாரம் அறிவித்திருந்தன.

அதனை தொடர்ந்து வோடாஃபோன் இந்தியாவை விட்டு வெளியேற வாய்ப்புகள் உள்ளதாகவும், அரசு முறையான மானியங்களை டெலிகாம் நிறுவனங்களுக்கு வழங்கினால் மட்டுமே தொடர முடியும் என்று அறிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று வோடாஃபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் டிசம்பர் 1-ம் தேதி முதல் தங்களது கட்டணங்களை உயத்த போவதாக அறிவித்திருந்தன,

இவர்கள் அறிவித்த சில மணி நேரங்களில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் தங்களது கட்டணங்களை உயர்த்த உள்ளதாகவும், அதனால் இணையதள தரவு வழங்குவதில் எந்த குறைபாடும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.

இத்தனை நாட்களாக அதிக கட்டணங்களை வசூலித்த வந்த ஏர்டெல், வோடாஃபோன் நிறுவனங்களுக்கு சவாலாக ஜியோ டெலிகாம் சேவை வழங்கி வருகிறது. எனவே நாங்கள் ஜியோவை தான் ஆதரிப்போம் என்று வாடிக்கையாளர்கள் கூறிவந்தனர்.

ஆனால் சில மாதங்களுக்கு முன்பு பிற நெட்வொர்க்குகளுக்கு ஜியோ வாடிக்கையாளர்கள் அழைத்தால் 6 பைசா நிமிடத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்தது. மேலும் தற்போது விரைவில் வோடாஃபோன் ஐடியா, ஏர்டெல் போன்று ஜியோ கட்டணங்களை அதிகரிக்கும் என்று கூறியுள்ளது வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Trending

Exit mobile version