வணிகம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் லாபம் 67% அதிகரிப்பு.. குஷியில் அம்பானி!

Published

on

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் லாபம் 67 சதவீதம் அதிகரித்து 13,806 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய், டெலிகாம், ரீடெயில் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், 2021-2022 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் 75 சதவீதம் வரை வருவாய் அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நிகர லாபம் 66.7 சதவீதம் அதிகரித்து, 13,806 கோடி ரூபாயாக உள்ளது.

காலாண்டு அறிக்கையை வெளியிட்டுப் பேசிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, இந்த கொரோனா பெறுந்தொற்று காலத்தில் வணிக நிறுவனங்களின் சவலானா சூழலிலும் நல்ல வளர்ச்சியை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பெற்றுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் பன்முக வணிகங்கள் அதிகளவில் நுகரப்பட்டுள்ளதை முதல் காலாண்டு முடிவுகள் கூறுகின்றன, இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என பேசினார்.

பெட்ரோ கெமிக்கல் வணிகம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பிரதான வணிகமான பெட்ரோ கெமிக்கல் பிரிவின் வருவாய் சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 75.2 சதவீதத்தைப் பெற்றுள்ளது. சென்ற ஆண்டு 58,906 கோடி ரூபாயாக இருந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருவாய் இந்த ஆண்டு 103,201 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் மட்டும் இந்த துறையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்க்கு 49.8 சதவீதம் வரை லாபம் உயர்ந்து 12,231 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டெலிகாம் பிரிவான ரிலையன்ஸ் ஜியோ வருவாய் முதல் காலாண்டில் 9.8 சதவீதம் அதிகரித்து 22,267 கோடி ரூபாயாக உள்ளது. நிகர லாபம் 45 சதவீதம் உயர்ந்து 3,651 கோடி ரூபாயாக உள்ளது. சராசரியாக ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து 138.40 ரூபாய் வருவாயாகக் கிடைத்துள்ளது. மொத்தமாக 44.6 கோடி வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ஜியோவை பயன்படுத்துகின்றனர்.

ரிலையன்ஸ் ரீடெயில்

ஊரடங்கு போன்ற காரணங்களால் ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தின் வருவாய் முதல் காலாண்டில் சரிந்துள்ளது. ரிலையன்ஸ் ரீடெயில் வருவாய் 21.9 சதவீதம் வரை அதிகரித்து 38,547 கோடி ரூபாய். இதுவே சென்ற ஆண்டு 47,046 கோடி ரூபாயாக இருந்தது.

பங்குச்சந்தை

இன்றைய சந்தை நேர முடிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் விலை 0.71 சதவீதம் சரிந்து 2,105.70 ரூபாயாகத் தேசிய பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

seithichurul

Trending

Exit mobile version