வணிகம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்க்கு ரூ,1,52,000 கோடி கடன்? திருப்பி செலுத்த புதிய திட்டத்தில் அம்பானி!

Published

on

இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 2020 மார்ச் மாதக் கணக்கின் படி ஒரு லட்சத்து ஐம்பத்து இரண்டாயிரம் கோடி ரூபாய்க் கடன் உள்ளது.

2021-ம் ஆண்டுக்குள் இந்த கடன் தொகையை பூஜ்ஜியமாகக் குறைக்க முகேஷ் அம்பானி திட்டம் தீட்டியிருந்தார். அதற்காகச் சவுதி அரேபியாவின் ஆரம்கோ நிறுவனத்திற்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்க்கு சொந்தமான எண்ணெய் நிறுவனப் பங்குகளை விற்க முடிவு செய்தார்.

ஆனால் அதற்கு அரசு மறுத்ததால், அந்த ஒப்பந்தம் தோல்வியில் முடிந்தது. அடுத்து கொரொனா வைரஸ் தாக்கம் அதிகரிக்க ஊரடங்கு உத்தரவுகள் அமலுக்கு வந்தது. அதனால் எண்ணெய் நிறுவனப் பங்குகள் பல மடங்கு சரிந்தன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ன செய்து கடனை அடைக்கும் என்று முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கவனித்து வந்தனர். இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோவில் ஃபேஸ்புக் நிறுவனம் 44 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.

அதனைத் தொடர்ந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலீட்டாளர்களுக்குக் கூடுதலாகப் பங்குகளை விற்று, அதன் மூலம் கிடைக்கும் நிதியைப் பயன்படுத்தி கடனை அடைக்க ரிலையன்ஸ் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version