இந்தியா

ஜஸ்ட் டயல் நிறுவனத்தை கைப்பற்றினார் முகேஷ் அம்பானி! இத்தனை ஆயிரம் கோடியா?

Published

on

இந்தியாவின் முன்னணி உள்ளூர் சர்ச் இன்ஜின் நிறுவனம் ஜஸ்ட் டயல் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிறுவனத்தை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.3497 கோடிக்கு விலைக்கு வாங்கி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகளாக ஜஸ்ட் டயல்நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தொலைபேசி, வலைதளம் மற்றும் மொபைல் பயன்பாடு வழியாக இந்தியாவில் உள்ளூர் தேடல் சேவையை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் தேடும் தகவல்களை அவர்களுக்கு ஒரு சில நொடிகளில் வழங்கி வரும் இந்த நிறுவனம் மிகப் பெரிய அளவில் வளர்ந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தை விலைக்கு வாங்க டாடா நிறுவனம் முயற்சி செய்ததாகவும் ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது இந்த நிறுவனத்தின் 66.95 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனம் ரூபாய் 3497 கோடிக்கு வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டதாக தெரிகிறது. முதல் கட்டமாக 40.5% பங்குகளை உடனடியாக கைப்பற்றுவதும் பின்னர் மீதம் உள்ள 26 சதவீத பங்குகளை நிறுவன கைப்பற்றல் விதிகளின் கீழ் செபி அனுமதி அளித்தவுடன் வாங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜஸ்ட் டயல் நிறுவனத்தை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கினாலும் ஜஸ்ட் டயல் நிறுவனத்தில் தற்போது சி.இ.ஓ ஆக இருக்கும் விபிஎஸ் மணி அதே பதவியில் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version