சினிமா செய்திகள்

அடுத்த வாரம் ரிலீசாகுது களவாணி 2!

Published

on

சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள களவாணி 2 திரைப்படம் பல தடைகளை தாண்டி அடுத்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விமல், ஓவியா நடிப்பில் வெளியான களவாணி திரைப்படம் இருவருக்குமே நல்ல பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. ஆனால், அதற்கு பிறகு, இருவரும் சேர்ந்து அல்லது தனித்தனியாக நடித்த எந்த படமும் களவாணி படமளவுக்கு ஓடவில்லை.

இதனால், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஓவியா, மீண்டும் விமலுடன் இணைந்து களவாணி 2 படத்தில் நடிக்க கமீட் ஆனார்.

ஆனால், இந்த படம், பல மாதங்களாக ரிலீஸ் தேதி பல முறை மாற்றியமைக்கப்பட்டு, சில பல தயாரிப்பு பிரச்னைகள் மற்றும் கட்டப்பஞ்சாயத்துகளின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு வந்தது.

சமீபத்தில், படத்தின் பிரச்னைகள் கோர்ட் மூலம் தீர்வு கண்டதை அடுத்து, வரும் ஜூலை 5ம் தேதி படம் ரிலீசாகிறது என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த படம் இருவருக்கும் கைகொடுக்குமா? இல்லையா? என்பதை இன்னும் ஒருவாரம் காத்திருந்து தெரிந்து கொள்வோம்.

seithichurul

Trending

Exit mobile version