இந்தியா

மருத்துவரின் காலில் விழுந்து மருந்து கேட்ட கொரோனா நோயாளியின் உறவினர்கள்!

Published

on

கொரனோ நோயாளியின் உறவினர்கள் மருத்துவரின் காலில் விழுந்து கொரோனா நோயாளிக்கு செலுத்தப்படும் ரெம்டெவிசிர் என்ற மருந்தை கேட்ட தகவல் தற்போது புகைப்படங்களுடன் வைரலாகி வருகிறது.

கொரோனா நோயாளிகளுக்கு முதலில் செலுத்தப்படும் மருந்து ரெம்டெவிசிர். இந்த மருந்து மிகப்பெரிய அளவில் பற்றாக்குறையாக இருப்பதாகவும் கள்ள மார்க்கெட்டில் சிலர் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ரெம்டெவிசிர் மருந்தை பெற்றுக்கொள்ள தமிழக அரசு ஒரு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றாலும் பல மாநிலங்களில் ரெம்டெவிசிர் மருந்துக்கு கிராக்கி அதிகம் உள்ளது.

இந்த நிலையில் நொய்டா என்ற பகுதியிலில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தங்களது உறவினருக்கு ரெம்டெவிசிர் வழங்குமாறு தலைமை மருத்துவ அதிகாரியின் காலில் விழுந்து கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் கெஞ்சும் புகைப்படம் தற்போது வெளிவந்துள்ளது.

கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரெம்டெவிசிர் மருந்து பற்றாக்குறையை இருப்பதாகவும் அந்தப் பற்றாக்குறையை தீர்க்க நொய்டா மாவட்ட அதிரடி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Trending

Exit mobile version