இந்தியா

பி.எஃப் மீதான வட்டி விகிதம் குறைப்பு: அதிர்ச்சியில் தொழிலாளர்கள்!

Published

on

தொழிலாளர்களை வைப்பு நிதிக்கான வட்டி குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது தொழிலாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலாளர்களுக்கு பிஎஃப் பணம் மாதம் மாதம் பிடிக்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் அந்த பணத்திற்கு வட்டியை மத்திய அரசு அளித்து வந்தது.

இந்த நிலையில் 2021 – 22 ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான பிஎஃப் மீதான வட்டி விகிதம் 8.50 சதவீதத்தில் இருந்து 8.10 சதவீதம் என குறைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் நிர்வாக குழு கூட்டம் சமீபத்தில் நடந்த நிலையில் இந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

8.50 சதவீதத்தில் இருந்து 8.10 சதவீதம் என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான பிஎஃப் மீதான வட்டி விகிதம் குறைக்கப்பட்டதால் தொழிலாளர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்பதால் தொழிலாளர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து தெரிவித்துள்ளனர்.

 

Trending

Exit mobile version