தொழில்நுட்பம்

ரெட்மி அறிமுகம் செய்யும் உலகின் அதிவேகமான சார்ஜர்.. 5 நிமிடத்தில் 100% சார்ஜ்

Published

on

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மொபைல் போன் முழுமையாக சார்ஜர் செய்ய வேண்டும் ஆனால் குறைந்தது 5 மணி முதல் ஏழு மணி நேரம் ஆகும். ஆனால் படிப்படியாக சார்ஜ் செய்யும் நேரம் குறைக்கப்படும் அளவுக்கு புதிய புதிய சார்ஜர் வந்து கொண்டிருக்கின்றன என்பதும் தற்போது அதிகபட்சமாக அரை மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யும் சார்ஜர் வந்துவிட்டன என்பது தெரிந்ததே. இதனால் சார்ஜில் செல்போனை போடும் நேரம் மிச்சமாகும் என்பதும் எளிதில் ஒரு செல்போனின் முழுமையான சார்ஜை முடித்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மொபைல் போன் தயாரிக்கும் நிறுவனங்களில் முன்னணியில் இருக்கும் ரெட்மி தற்போது ஐந்தே நிமிடத்தில் 100% முழுமையான சார்ஜ் செய்யும் புதிய வகை சார்ஜர் அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம் 300w அதிவேக சார்ஜ் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளதாகவும் தெரிகிறது.

ஒரு மாதத்திற்கு முன்னர் ரியல்மி அறிமுகம் செய்த 240w வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்தை விட இது அதிவேகமானது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் அதிவேக சார்ஜரை ரியல்மீ அறிமுகம் செய்தபோதை இதை முறியடிக்க வேறு சார்ஜர் இப்போதைக்கு வராது என்று நினைத்து கொண்டிருந்த நிலையில் சில நாட்களில் 300w சார்ஜர் அறிமுகம் செய்யப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

4500 mAh பேட்டரியுடன் கூடிய ரெட்மி 300w ரெட்மி சார்ஜர், ஐந்து நிமிடங்களில் ஒரு ஆண்ட்ராய்டு செல்போனை சார்ஜ் செய்து விடும் என்றும் 50% சார்ஜ் செய்ய இரண்டு நிமிடங்கள் மற்றும் 11 வினாடிகள் போதும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 300w அதிவேக சார்ஜர் வெகு சீக்கிரம் வெளியிடும் என்றும் விரைவில் இதன் விலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version