இந்தியா

நவம்பர் 30ம் தேதி அறிமுகமாகும் Redmi Note 11T 5G ஸ்மார்ட்போன்: என்ன விலை தெரியுமா?

Published

on

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ரெட்மி அவ்வபோது புதுப்புது மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது நவம்பர் 30-ஆம் தேதி Redmi Note 11T 5G என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் உள்ள வசதிகள் மற்றும் விலை என்ன என்பதை தற்போது பார்ப்போம்

சீன நிறுவனமான Redmi Note 11T 5G இந்தியாவில் வரும் நவம்பர் 30-ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போனில் உள்ள வசதிகள் பின்வருமாறு

6.6-இன்ச் முழு HD டிஸ்ப்ளே

90Hz ரிஃப்ரெஷிங் ரேட் மற்றும் மீடியா டெக் டைமன்சிட்டி 810 SoC

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை இண்டர்னல் ஸ்டோர்ஜே

5,000mAh பேட்டரி

50 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டர் மற்றும் 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா

16 மெகாபிக்சல் செல்ஃபி கேமிரா

Redmi Note 11T 5G ஸ்மார்ட்போன் 4GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் விலை ரூ. 14,000 என்றும், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ரூ.16,400 என்றும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ரூ. 17,500 என்றும் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version