இந்தியா

விற்பனை தொடங்கிய ஒரே நிமிடத்தில் 70,000 போன்கள் விற்பனை; சாதனை செய்த ரெட்மி

Published

on

விற்பனைக்கு வந்த ஒரே நிமிடத்தில் 70 ஆயிரம் போன்கள் விற்பனை செய்யப்பட்டு ரெட்மி நிறுவனம் சாதனை செய்துள்ளது.

சியோமி ரெட்மி நிறுவனம் அவ்வப்போது புது புது மாடல் செல்போன்களை அறிமுகம் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் ரெட்மி கே 40 கேமிங் என்ற பெயரில் புதிய செல்போன் பிப்ரவரி 18ஆம் தேதி விற்பனை தொடங்கியது.

இந்த ஸ்மார்ட்போன் முதல் நாளே 70 ஆயிரம் செல்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபோன்று பயனாளிகளுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்த போனின் விலை இந்திய மதிப்பில் 36 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை இருக்கும் நிலையில் இந்த போனின் சிறப்பம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

டூயல் சிம் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான எம்ஐயுஐ 13

6.67-இன்ச் ஃபுல் எச்டி+ அமோஎல்இடி பேனல்

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 ப்ராசஸர் மற்றும் 12ஜிபி ரேம்

டூயல் விசி கூலிங், 256ஜிபி வரை யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜ், ஜேபில் ஃபோர்-யூனிட் ஸ்பீக்கர், மேக்னட் பவர் பாப்-அப் ஷோல்டர் கீ 2.0, சைபர்எஞ்சின் அல்ட்ரா-வைட்பேண்ட் எக்ஸ்-ஆக்சிஸ் மோட்டார் போன்ற கேமிங்-ஸ்பெசிபிஃக்

64-மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்686 மெயின் சென்சார் + 120 டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூவுடன் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா + 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா

20 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்596 செல்பி கேமரா

4,700எம்ஏஎச் பேட்டரியுடன் 120W ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங்

இந்த ஸ்மார்ட்போன் 162.5×76.7×8.5மிமீ மற்றும் எடையில் 210 கிராம் உள்ளது.

 

Trending

Exit mobile version