வேலைவாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலர் வேலை!

Published

on

நாமக்கல் மாவட்டத்தில், 9 ஊராட்சி ஒன்றியங்களில் காலியிடங்கள் 16 உள்ளது. இதில் ஊராட்சி செயலர் வேலைக்குத் திங்கள்கிழமை முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாவட்டம்: நாமக்கல்

மொத்த காலியிடங்கள்: 16

வேலை: கிராம ஊராட்சி செயலர்

வயது: 1.7.2019 அன்று 18 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினராக இருந்தால், 30 வயதிற்கு மேற்படாதவராகவும், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 35 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்ற ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இப்பாலைக்கு விண்ணப்பிப்போர், ஊராட்சி செயலர் வேலை காலியாக உள்ள கிராம ஊராட்சியில் குடியிருப்பவராக இருக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்கள் அந்தக் கிராம ஊராட்சியில் இல்லாதபட்சத்தில், அதே ஊராட்சி ஒன்றியத்தின் அந்தக் கிராம ஊராட்சிக்கு அருகிலுள்ள கிராம ஊராட்சியைச் சார்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்றுப் பரிசீலிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில், 16 கிராம ஊராட்சி செயலர் வேலைகள் காலியாகவுள்ளன. இதனை நிரப்ப அந்தந்த கிராம ஊராட்சியின் தனி அலுவலர்களான வட்டார வளர்ச்சி அலுவலர்கள்(கிராம ஊராட்சிகள்) மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

காலியிடங்கள் மற்றும் அதற்கு ஒதுக்கப்பட்ட இன சுழற்சி முறை, மாதிரி விண்ணப்பப் படிவம் உட்பட இதர விபரங்கள் தேசிய தொழில் நெறி வழிகாட்டு மைய (www.ncs.gov.in) இணையதளத்திலும், நாமக்கல் மாவட்ட (https://namakkal.nic.in) இணையதளத்திலும் மற்றும் அந்தந்த கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் தகவல் பலகையிலும் வெளியிடப் பட்டுள்ளன.

பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் சுய அத்தாட்சி செய்யப்பட்ட உரியச் சான்றிதழ்களின் நகல்களுடன், அந்தந்த கிராம ஊராட்சி அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரிலோ. பதிவு அஞ்சலிலோ அனுப்பி வைக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே, நேர்முகத் தேர்வுக்கான அழைப்பாணை கடிதம் கிராம ஊராட்சிகளின் தனி அலுவலர்களால் அனுப்பி வைக்கப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டுத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s3b9228e0962a78b84f3d5d92f4faa000b/uploads/2019/11/2019110937.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 22.11.2019

author avatar
seithichurul

Trending

Exit mobile version