இந்தியா

செல்போன் போன் மின் கட்டணத்திற்கும் ரீசார்ஜ்: விரைவில் வருகிறது ஸ்மார்ட் மீட்டர்!

Published

on

செல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்வது போல் மின் கட்டணமும் ரீசார்ஜ் முறையில் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

செல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்து அதில் பணம் இருக்கும் வரை பேசிக் கொள்ளும் முறை கடந்த சில ஆண்டுகளாக உள்ளது என்பது தெரிந்ததே. அதேபோல் மின் கட்டணமும் இன்னும் இனி ரீசார்ஜ் முறையில் கொண்டு வரப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்காக நாடு முழுவதும் ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்றும் அந்த மீட்டரில் முன்கூட்டியே ரீசார்ஜ் செய்து கொண்டு அதில் உள்ள பணத்திற்கு தகுந்தவாறு மின்சாரத்தை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அதுமட்டுமின்றி ஒவ்வொரு நாளும் நாம் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தியுள்ளோம், ரீசார்ஜ் செய்த தொகை எவ்வளவு கழிந்து உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும் என்றும், அதற்கேற்ற மின்சார பயன்பாட்டை ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றமத்திய அமைச்சரவை கூட்டத்தில் மின் சீர்திருத்தங்கள் அடிப்படையில் பயன்சார்ந்த புதுப்பிக்கப்பட்ட மின் விநியோகத் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அவற்றில் ஒன்றுதான் இந்த ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இந்த ஸ்மார்ட் மீட்டர் விவசாய மின் இணைப்புக்கு மட்டும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் மொத்தம் 25 கோடி ஸ்மார்ட் ப்ரீபெய்ட் மீட்டர் பொருத்தப்படும் என்றும் அவற்றில் முதல் கட்டமாக வரும் 2023-ம் ஆண்டுக்குள் பத்து கோடி ஸ்மார்ட் மீட்டர் பொருத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நடைமுறை அமலுக்கு வந்தால் ஒவ்வொரு மாதமும் நாம் மின்வாரியம் சென்று மின் கட்டணம் செலுத்த வேண்டிய தேவையில்லை என்றும் ஆன்லைனிலேயே நமக்கு தேவையான அளவுக்கு ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர்ல் அவ்வப்போது ரீசார்ஜ் செய்து மின்சாரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version