இந்தியா

ஏடிஎம் மிஷினில் இருந்து கிழிந்த ரூபாய் நோட்டுகள் வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்?

Published

on

கிழிந்த ரூபாய் நோட்டுகள் மற்றும் அழுக்கடைந்த நோட்டுகள் அந்த நோட்டுகளின் சொந்தக்காரர்களுக்கு ஒரு பெரிய தொல்லை என்பதும் அந்த நோட்டுகளை மாற்ற முடியாமல், செலவு செய்ய முடியாமல் திண்டாடி வருவார்கள் என்பதும் தெரிந்ததே.

அந்த நிலையில் ஏடிஎம் மிஷினில் இருந்து கிழிந்த நோட்டுகள் வந்தால் வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது பார்ப்போம். கிழிந்த அல்லது சிதைந்த நோட்டுகள் ஏடிஎம் மிஷனில் இருந்து வாடிக்கையாளர்கள் பெற்றால் உடனடியாக எந்தவிதமான பதட்டமும் இன்றி சேதமடைந்த நோட்டுக்களை எளிதாக வங்கியின் கிளைகளில் மாற்றிக் கொள்ளலாம்.

கிழிந்த நோட்டுகள் அல்லது அழுக்கான நோட்டுகளின் அத்தியாவசிய பகுதி காணாமல் போயிருந்தாலும் கூட மாற்றிக் கொள்ளலாம். அதாவது ரூபாய் நோட்டுகளில் உள்ள உத்தரவாதம், உறுதிமொழி மீது கையொப்பம், அசோக சக்கரம், மகாத்மா காந்தியின் உருவப்படம், வாட்டர் மார்க் உள்ளிட்ட எந்த வகை சேதம் இருந்தாலும் அதை எளிதாக ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி எந்த ஒரு பொதுத்துறை வங்கியின் கிளைகளிலும் தனியார் துறை வங்கியின் கிளைகளிலும் உள்ள நாணய காப்பக கவுண்டரில் மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஏடிஎம் மிஷினில் இருந்து கிழிந்த நோட்டுகள் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம். எந்த ஏடிஎம்மில் இருந்து சேதமான நோட்டுகள் வந்ததோ அந்த வங்கிக்கு வாடிக்கையாளர் செல்ல வேண்டும். அந்த வங்கியில் இருந்து விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்ய வேண்டும்.

பணம் எடுக்கப்பட்ட தேதி, நேரம் மற்றும் இடம் பற்றிய தகவல்களை வாடிக்கையாளர் அந்த விண்ணப்பத்தில் எழுத வேண்டும். இதற்குப் பிறகு, விண்ணப்பத்துடன், ஏடிஎம்மில் இருந்து பரிவர்த்தனை தொடர்பான சீட்டையும் இணைக்க வேண்டும். சீட்டு வழங்கப்படவில்லை என்றால், மொபைலில் பெறப்பட்ட பரிவர்த்தனை விவரங்களை அளிக்க வேண்டும். அதன் பிறகு, உங்கள் நோட்டுகள் வங்கியால் மாற்றப்படும்.

 

seithichurul

Trending

Exit mobile version