சினிமா செய்திகள்

விஜய்சேதுபதிக்கு ஜோடியான ஸ்ருதிஹாசன்; காரணம் சன் டிவியா?

Published

on

நீண்ட காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நடிகை ஸ்ருதி ஹாசன், தற்போது விஜய்சேதுபதிக்கு ஜோடியாக கம் பேக் ஆகிறார்.

பேராண்மை, புறம்போக்கு எனும் பொது உடைமை போன்ற படங்களை இயக்கிய எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதுப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகியுள்ளார்.

பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த ஸ்ருதி ஹாசன் தற்போது, சன் குழுமத்தின் சன் லைஃப் சேனலில் ஹலோ சகோ என்ற ரியாலிட்டி ஷோ நடத்தி வருகிறார்.

சமீபத்தில் விஜய்சேதுபதியும், சன் டிவியில் நம்ம ஊரு ஹீரோ என்ற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார்.

இதன்மூலம் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாகத்தான் விஜய்சேதுபதி படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு வாய்ப்பு கிடைத்திருக்குமோ என கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்க தொடங்கியுள்ளன.

seithichurul

Trending

Exit mobile version