சினிமா செய்திகள்

உடல் எடை காரணமாக விஜய் சேதுபதி நீக்கப்பட்டாரா?- என்னானது அமீர் கான் உடனான படம்?

Published

on

விஜய் சேதுபதி பாலிவுட் படம் ஒன்றில் அமீர் கான் உடன் இணைந்து நடிக்கப் போவதாக கொரோனா பதற்றத்துக்கு முன்னர் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன.

ஆனால், அடுத்து விஜய் சேதுபதி அமீர் கான் படத்தில் இருந்து விலகி உள்ளதாக செய்திகள் வந்தன. உண்மையில் அமீர் கான் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆவதாக இருந்த விஜய் சேதுபதி ஏன் படத்தில் இருந்து விலகினார் என்ற கேள்வி பலருக்குள்ளும் இருந்தது. ஹாலிவுட்டில் வெளியான Forest Gump என்னும் படத்தின் பாலிவுட் ரீமேக ஆக லால் சிங் சத்தா என்னும் படத்தை அமீர் கான் கொண்டு எடுக்க முடிவு செய்யப்பட்டது.

இதில் அமீர் கானுக்கு ஜோடியாக நடிகை கரீனா கபூர் நடித்து வருகிறார். இரண்டாம் ஹீரோவாக ஒரு தமிழனாகவே அந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் விஜய் சேதுபதி. ஆனால், கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு படப்பிடிப்புகள் தொடங்கப்படலாம் என்ற போது லால் சிங் சத்தா படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியதாக செய்திகள் வந்தன. உடனே விஜய் சேதுபதியின் எடை காரணமாகத் தான் அமீர் கான் படத்திலிருந்து நீக்கப்பட்டதாகத் தகவல்கள் பரவின. ஏனென்றால் அதே சமயத்தில் தான் தனது அறிமுகம் பாலிவுட் படத்தில் இருந்து உடல் எடை குறைத்துவிட்டார் என்ற காரணத்துக்காக கீர்த்தி சுரேஷ் விலக்கப்பட்டார்.

இந்தக் கருத்துக்குப் பின்னணியில் உள்ள உண்மை என்ன என்பதை தற்போது பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதி விளக்கி உள்ளார். விஜய் சேதுபதி கூறுகையில், “கொரோனாவுக்கு முன் அமீர் கான் என்னிடம் நேரடியாக அழைத்து லால் சிங் சத்தா பட வாய்ப்பை அளித்தார். தமிழ் படப்பிடிப்பில் இருந்த என்னை இங்கு வந்து சந்தித்து நேரடியாக பட கதையை விளக்க நான் உடனே சம்மதித்துவிட்டேன். ஆனால், கொரோனாவுக்குப் பின் நான் ஐந்து தெலுங்கு படங்கள் அதைவிட அதிகமான தமிழ்ப் படங்களில் கமிட் ஆகிவிட்டேன். இதனால் தேதி ஒதுக்க முடியாத காரணத்தால் மட்டுமே நான் விலகிக் கொள்வதாக அமீர் கானிடமே தெரிவித்துவிட்டேன்” என்றுள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version