சினிமா செய்திகள்

ரஜினிகாந்த்தின் இரத்த அழுத்தத்துக்கு இதுதான் காரணமா?

ஹைதராபாத்தில் தன்னை தனிமைப் படுத்திக்கொண்ட ரஜினிகாந்த்துக்கு, நேற்று மதியம் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Published

on

ஜனவரி மாதம் கட்சி தொடங்கும் முன்பு அண்ணாத்த படப்பிடிப்பை முடித்துவிட்டு வர வேண்டும் என்று ரஜினிகாந்த் திட்டமிட்டு இருந்தார்.

டிசம்பர் 15-ம் தேதி தொடங்கப்பட்ட படப்பிடிப்பு ஜனவரி 10-ம் தேதி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பில் கலந்துகொண்ட சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு தள்ளிப்போனது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் தன்னை தனிமைப் படுத்திக்கொண்ட ரஜினிகாந்த்துக்கு, நேற்று மதியம் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சூப்பர் ரஜினிகாந்த் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருந்தாலும், ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போது பதற்றமாகவே தான் இருப்பார். இதை ரஜினி உட்படப் பலரும் கூறியுள்ளனர்.

இப்படிப்பட்ட ரஜினிகாந்த் ஜனவரி மாதம் மக்கள் சேவை கட்சி என்பதைத் தொடங்க உள்ளார். ஒரு படத்தில் நடிக்கவே இப்படி பதற்றமாக இருக்கும் ரஜினிகாந்த் ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடங்குகிறார் என்றால் அவருக்கு எவ்வளவு பதற்றம் இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். ஒரு பக்கம் படப்பிடிப்பு தள்ளிப்போகிறது. மறுபக்கம் கொரோனா தொற்று மற்றும் அரசியல் கட்சி தொடக்கம்.

இவை அனைத்தின் காரணமாகவே இந்த உயர் அழுத்தப் பிரச்சனை ரஜினிகாந்த்துக்கு வந்து இருக்கும் என்று கூறப்படுகிறது.

சிறு நீரக அறுவைச் சிகிச்சை ரஜினிக்குச் செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும். அதனால் அவர் உடல்நலத்தில் அக்கரை தேவை என மருத்துவர்கள் அவருக்கு அறிவுரை கூறினர்.

https://seithichurul.com/life-style/foods-to-avoid-during-high-blood-pressure-in-tamil/2703/

seithichurul

Trending

Exit mobile version