இந்தியா

மொபைல் போனில் பென்சிலால் எழுதலாம்: ரியல்மி அறிமுகம் செய்யும் புதுமாடல்

Published

on

ரியல்மி அறிமுகம் செய்யும் புது வகையான மொபைல் போனில் பென்சில் வைத்து எழுதும் வசதி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

ரியல்மி நிறுவனத்தில் லேட்டஸ்ட் அறிமுகம் ரியல்மி ஜிடி 2 ப்ரோ என்ற புதுமாடல் மொபைல்போன். இந்த மாடலில் ஸ்மார்ட்போனின் பின்பக்கத்தில் ஒயிட் பேப்பர் போன்ற ஒரு வசதி உள்ளது. அதில் பென்சில் வைத்து எழுதவோ அல்லது படம் வரையவோ முடியும் என்பதும் எளிதில் அதை அழிக்கவும் முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வசதி போன் பேசிக்கொண்டு இருக்கும் போது குறிப்புகள் எழுத பயன்படும் என்று கூறப்படுகிறது. இந்த போனின் முழு விபரங்களை தற்போது பார்ப்போம்:

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட்

ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 5,000எம்ஏஎச் பேட்டரி

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1,400 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்

6.7-இன்ச் பிளாட் 2கே அமோஎல்இடி எல்டிபிஓ டிஸ்ப்ளே

12ஜிபி வரையிலான ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ்

8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.49,999

12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.57,999

இந்தியாவில் ஏப்ரல் 14ஆம் தேதி இந்த புதுமாடல் மொபைல் போன் அறிமுகமாகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version