இந்தியா

இந்தியாவில் வெளியானது ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன்: என்னென்ன வசதிகள்?

Published

on

ரியல் மீ நிறுவனத்தின் ஒவ்வொரு மாடல் ஸ்மார்ட்போன் வெளியாகும்போது இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்பதும் குறைந்த விலையில் நிறைய அம்சங்கள் கொண்ட போன் என்பதால் ஏராளமானோர் ரியல்மி ஸ்மார்ட்போனை விரும்பி வாங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரியல்மீ நிறுவனத்தின் அடுத்த படைப்பான ரியல்மீ 8ஐ மற்றும் ரியல்மி 8s ஆகிய இரண்டு ஸ்மார்ட் போன்கள் இன்று வெளியாகி உள்ளது. இதனை அடுத்து இந்த போனை வாங்குவதற்கு இந்தியர்கள் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மொபைல் போன்களில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.

ரியல்மி 8ஐ ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் டிஸ்ப்ளே கொண்டது என்பதும், 80Hz தொடுதிரை தரம் மற்றும் 120Hz ரெஃபிரஸ் தரம் உள்ளது என்பதும், மீடியாடெக் ஹீலியோ ஜி96 புராஸசரை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, 50 மெகாபிக்சல் கொண்ட மூன்று பின்புற கேமரா
ஒரே நேரத்தில் முன்பக்க மற்றும் பின்பக்க கேமராவில் வீடியோ எடுக்கும் வசதி ஆகிய சிறப்பு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

அதேபோல் ரியல்மி 8s ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் டிஸ்ப்ளே வசதி மற்றும் 180Hz தொடுதிரை தரம் மற்றும் 120Hz ரெஃபிரஸ் தரம் ஆகியவை உள்ளது. மேலும் உலகின் முதல் டைமன்சிட்டி 5ஜி புராஸசர் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் ஹோல் பஞ்ச் வசதி கொண்ட செல்ஃபி கேமரா மற்றும் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, 64 மெகாபிக்சல் கொண்ட மூன்று பின்புற கேமரா உள்ளது. மேலும் 4ஜிபி ரேம் , 64gb+128gb, 32gb+128gb நினைவக திறன் மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது.

மேற்கண்ட இரண்டு ஸ்மார்ட்போன்களும் 5ஜி வசதியை கொண்டது என்பதால் அடுத்த தலைமுறைக்கான ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version