தமிழ்நாடு

அதிமுக, திமுக, விசிக, நாதக, எந்த கட்சி கூப்பிட்டாலும் செல்வேன்: காயத்ரி ரகுராம்

Published

on

பாரதிய ஜனதா கட்சியிலிருந்து வெளியேறிய நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் அதிமுக, திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி என எந்த கட்சி அழைப்பு விடுத்தாலும் அந்த கட்சிக்கு செல்வேன் என பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாரதிய ஜனதா கட்சியில் தீவிரமாக பணி செய்து கொண்டிருந்த நடிகை காயத்ரி ரகுராம், சில வாரங்களுக்கு முன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த சர்ச்சைக்குரிய ஒரு பதிவு காரணமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவரை ஆறு மாதத்துக்கு சஸ்பெண்ட் செய்து வைத்திருந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஆறு மாதம் முடிந்த பின்னர் அவர் மீண்டும் கட்சியில் இணைந்து கொள்வார் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென பாஜகவில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் காயத்ரிரகுராம் அரசிலிருந்து விலகுவதா? அல்லது வேறு கட்சியில் இணைவாரா? அல்லது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்துவாரா? என்ற கேள்விகள் எழுந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால் எப்போதும் போல் நடிப்பேன் என்றும் ஆனால் அதே நேரத்தில் அரசியல் தான் எனக்கு முக்கியம் என்றும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதுதான் எனது ஒரே குறிக்கோள் என்றும் தெரிவித்துள்ளார்.

எனது கொள்கைகளுக்கு ஏதுவாக இருக்கும் எந்த கட்சி கூப்பிட்டாலும் செல்வேன் என்றும் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி என யார் கூப்பிட்டாலும் எனக்கு எந்த கட்சியில் இருந்தால் மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்று தோன்றுகிறதோ அந்த கட்சுக்கு செல்வேன்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் திமுகவில் இணைய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version