சினிமா செய்திகள்
லக்ஷ்மி ராமகிருஷ்ணன் சவாலுக்கு நான் ரெடி – அமலாபால் அதிரடி!
ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்தது குறித்து அமலாபால் தன்னுடன் விவாதிக்க தயாரா என லக்ஷ்மி ராமகிருஷ்ணன் சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், ஆடை படம் தொடர்பாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அமலாபாலிடம் இந்த கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு விடையளித்த அமலாபால், அவரது கேள்வியின் நோக்கம் எனக்கு புரியவில்லை. ஆனால், நிர்வாணமாக நடித்தது குறித்து ஆரோக்கியமான வாக்குவாதமாக இருந்தால் அவருடன் பேச தான் தயார் என பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும், செய்தியாளர்களிடம் பேசிய அமலாபால், சாதி, மதம் கடந்து அனைவரும் மனிதம் வளர்க்க வேண்டும். உண்மையான மனிதம் என்பது வயதான பிறகே பலருக்கும் புரிய வருகிறது என்றும் கூறினார்.