சினிமா செய்திகள்

மீண்டும் உருவாகும் ராட்சசன் கூட்டணி!

Published

on

ஜெர்சி படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ள விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்க அமலா பால் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2018ஆம் ஆண்டு வெளிவந்த ராட்சசன் படம் வசூல் ரிதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு அமலா பால் ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில் நானி நடிப்பில் வெளியான ஜெர்சி படத்தின் ரீமேக்கின் மூலமாக இந்த ஜோடி மீண்டும் இணையவுள்ளது.

தெலுங்கில் நானி நடிப்பில் உருவாகிய ஜெர்சி படத்தின் ரீமேக்கில் நடிக்க விஷ்ணு விஷால் ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்தார். மேலும் இந்த படத்தில் அமலா பால் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி நடிக்கும் 800 படத்தை இணைந்து தயாரிக்கும் பாகுபலி வில்லன் நடிகர் ராணா டகுபதி தான் இந்த படத்தையும் இணைந்து தயாரிக்கவுள்ளார்.

Trending

Exit mobile version