இந்தியா

14 மணி நேரம் ஆர்.டி.ஜி.எஸ். செயல்படாது: ரிசர்வ் வங்கி அறிவிப்பால் பரபரப்பு!

Published

on

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளிலும் 14 மணி நேரம் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி ஆர்டிஜிஎஸ் என்ற பணம் பரிவர்த்தனை செயல்படாது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வங்கிகளில் ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை செய்வதற்கு நெஃப்ட் மற்றும் ஆர்டிஜிஎஸ் ஆகிய இரண்டும் பயன்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏராளமான வங்கி வாடிக்கையாளர்கள் இந்த இரண்டு முறையை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்து வருகின்றனர். இந்த இரண்டிலும் பண பரிவர்த்தனை செய்வது மிகவும் பாதுகாப்பானது என்பதால் வங்கி வாடிக்கையாளர்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆர்.டி.ஜி.எஸ். தொழில்நுட்பத்தில் ஒரு சில மாற்றங்களும் மேம்பாடுகளும் செய்ய இருப்பதை அடுத்து ஏப்ரல் 18-ஆம் தேதி அதிகாலை 12 மணி முதல் 14 மணி நேரத்திற்கு செயல்படாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனினும் நெஃப்ட் வழக்கம் போல் செயல்படும் என்றும் அதில் பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Trending

Exit mobile version