இந்தியா

ரூபாய் நோட்டு தரும் ஏடிஎம் போல் நாணய இயந்திரம்: ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு..!

Published

on

ஏடிஎம் மெஷினில் இருந்து ரூபாய் நோட்டுக்கள் பெற்று கொள்வது போல் இனி நாணயங்களை எடுப்பதற்கு என தனியாக இயந்திரம் அறிமுகம் செய்யப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கடந்த இரண்டு நாட்களாக மும்பையில் ஆலோசனை நடத்திய நிலையில் இந்த ஆலோசனையில் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து 0.25 சதவீதம் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதை அடுத்து 6.5 சதவீதமாக தற்போது ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்துள்ளது. கடந்த ஒரே ஆண்டில் 2.50 சதவீதம் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் அறிவித்த முக்கிய அறிவிப்பில் க்யூஆர் கோடு அடிப்படையில் சில்லரை ஆணையங்கள் வழங்கும் இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும் முதல் கட்டமாக 12 நகரங்களில் இந்த இயந்திரங்கள் வைக்கப்படும் என்றும் அதன் பின் படிப்படியாக இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்த இயந்திரம் வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

#image_title

கியூஆர் கோடு அடிப்படையில் ஆன இந்த நாணயங்கள் வழங்கும் இயந்திரம் யுபிஐ மூலம் பரிமாற்றம் செய்யப்படும் என்றும் சில்லரை நாணயங்களை வழங்கி அந்த தொகை வங்கி கணக்கிலிருந்து டெபிட் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருசில நாடுகளில் ஏற்கனவே நாணயங்கள் வழங்கும் இயந்திரம் இருந்தாலும் அவை பணத்தை அளித்துவிட்டு அதற்கு ஈடாக நாணயங்கள் வழங்குவது போல் இருக்கும், ஆனால் இந்த நாணய இயந்திரம் யுபிஐ அடிப்படையில் இயங்கும் என்றும் தங்கள் வங்கி கணக்கிலிருந்து பணத்தை டெபிட் செய்து விட்டு அதற்கு பதிலாக நாணயங்களை இயந்திரத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் சக்தி காந்த தாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

முதல் கட்டமாக இந்த நாணய இயந்திரங்கள் 12 நகரங்களில் 19 இடங்களில் பரிசோதனை முயற்சியாக வைக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், குறிப்பாக நாணயங்கள் அதிகம் தேவைப்படும் ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், ஷாப்பிங் மால்கள், காய்கறி மார்க்கெட்டுகள் ஆகிய பகுதிகளில் வைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

மிகவும் எளிதாக நாணயங்களை பெறும் வகையில் இதில் வசதி செய்யப்படும் என்றும் பரிசோதனை முயற்சியாக அறிமுகம் செய்த பின் இதில் உள்ள சிக்கல்களை அறிந்து அதன் பின் நாடு முழுவதும் நாணய இயந்திரங்கள் நிறுவப்படும் என்றும் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

நாணயங்கள், சக்தி காந்த தாஸ், ரிசர்வ் வங்கி,

seithichurul

Trending

Exit mobile version