இந்தியா

30% வரி பெற்றாலும் கிரிப்டோகரன்ஸியை தடை செய்ய வேண்டும்: ஆர்பிஐ கவர்னர்

Published

on

கிரிப்டோகரன்சி மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 30% வரி விதிக்கப்படுவதாக சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் கிரிப்டோகரன்சி மூலம் கிடைக்கும் வருமானத்தில் 30 சதவீதம் வரி அறிவிக்கப்பட்டாலும் திருட்டு கரன்சியை இந்தியாவில் தடை செய்வதுதான் நல்லது என்றும் கிரிப்டோகரன்சி ஒரு மோசமான மோசடியான திட்டம் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரவிசங்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்

ஒருபக்கம் கிரிப்டோ கரன்சிக்கு வரி விதிக்கப்படுவதாக மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்த நிலையில் இன்னொரு பக்கம் கிரிப்டோகரன்சி மோசமான திட்டம் என்றும் அதை தடை செய்ய வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து கிரிப்டோகரன்சி விவகாரத்தில் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கி ஆளுநருக்கும் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் கிரிப்டோகரன்சிக்கு தடை செய்ய வேண்டும் என பல சமூக ஆர்வலர்களும் அரசியல் கட்சிகளும் கூறி வரும் நிலையில் விரைவில் கிரிப்டோகரன்சி தடை குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Trending

Exit mobile version