இந்தியா

புழக்கத்தில் இருக்கும் ரூ.2000 நோட்டுக்கள் எவ்வளவு? ரிசர்வ் வங்கி விளக்கம்!

Published

on

தற்போது நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பது எவ்வளவு என்பது குறித்து மத்திய ரிசர்வ் வங்கியின் விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து புதிதாக 500 ரூபாய் மட்டும் 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

2000 ரூபாய் நோட்டு அச்சடிக்கபட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன என்பதும் இதனால் கருப்பு பணம் விகிதம் அதிகரிக்கும் என்றும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுவது நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018-2019 ஆம் நிதியாண்டிற்கு பின்னர் புதிதாக 2,000 ரூபாய் நோட்டு அச்சடிக்கவில்லை என இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. தற்போது இந்தியாவில் 2233 மில்லியன் ரெண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாகவும் தற்போது புழக்கத்தில் இருக்கும் மொத்த பணத்தில் இவை 1.75 சதவீதம் மட்டுமே என்றும் மத்திய மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இனிமேலும் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க வாய்ப்பு இல்லை என்றும் வங்கிக்கு வரும் 2000 ரூபாய் நோட்டுகள் முடக்கப்படும் என்றும் செய்திகள் கசிந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version